தமிழக செய்திகள்

கொடிக்கம்பம் விழுந்து ஒருவர் காயம் - பா.ஜ.க. நிர்வாகி மீது வழக்குப்பதிவு

திருப்பத்தூரில் 50 அடி உயரமுள்ள பா.ஜ.க. கொடிக்கம்பம் ஒன்று சரிந்து கீழே விழுந்தது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று தமிழக பா.ஜக. தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டார். அவரை வரவேற்க திருப்பத்தூர் முதல் ஜோலார்பேட்டை வரை பா.ஜனதா கொடிக்கம்பங்கள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் திருப்பத்தூருக்கு வந்த அண்ணாமலை திருப்பத்தூர் - புதுப்பேட்டை கூட்ரோட்டில் நடைபயணம் மேற்கொண்டார்.

அப்போது திடீரென 50 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் ஒன்று சரிந்து கீழே விழுந்தது. இதில் அங்கு நின்றிருந்த திருப்பத்தூர் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த கலீல் (வயது 54) என்பவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனே அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திருப்பத்தூரில் கொடிக்கம்பம் விழுந்து ஒருவர் படுகாயமடைந்த நிலையில், பா.ஜ.க நிர்வாகி சண்முகம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு