தமிழக செய்திகள்

கேரளாவில் வெள்ள பாதிப்பு: 8 டன் உணவு பொருட்கள் சேகரிப்பு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது

கேரளா வெள்ள பாதிப்பில் கஷ்டப்படும் மக்களுக்காக சென்னையிலிருந்து 8 டன் உணவு பொருட்கள் சேகரித்து லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

சென்னை,

கேரளா வெள்ள பாதிப்பையொட்டி, அங்குள்ள மக்களுக்கு உதவ எல்லா மாநிலங்களும் முன்வந்துள்ளன. அந்தவகையில் கேரளா வெள்ள பாதிப்பில் சிக்கி உணவுக்காக கஷ்டப்படும் மக்களுக்காக சென்னையில் உணவுப்பொருட்கள் சேகரிக்கும் பணி தொடங்கியது.

சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் தலைமையில் நடந்த இந்த பணி நடந்தது. மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்புடைய 8.05 டன் அளவில் உணவுப்பொருட்கள் சேகரிக்கப்பட்டன.

இந்த உணவுப்பொருட்கள் அனைத்தும் சென்னை கோயம்பேட்டில் இருந்து லாரிகள் மூலம் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த லாரிகளை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் கொடியசைத்து கேரளாவுக்கு வழியனுப்பி வைத்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்