தமிழக செய்திகள்

ரெயில்வே சுரங்கப்பாதை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கிடந்த கைத்துப்பாக்கி

போடி அருகே ரெயில்வே சுரங்கப்பாதை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கைத்துப்பாக்கி கிடந்தது.

போடி சுப்புராஜ் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் தெய்வம் (வயது 37). இவரது வீட்டின் அருகே ரெயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு தெய்வம் அந்த வழியாக நடந்து சென்றார். அப்போது அந்த பள்ளத்தில் கைத்துப்பாக்கி ஒன்று துருப்பிடித்த நிலையில் கிடந்தது. அதை எடுத்த தெய்வம் நேற்று காலை போடி நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணை நடத்தியதில், அது சுமார் அடி நீளமுள்ள ஆங்கிலேயர் கால கைத்துப்பாக்கி என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்