தமிழக செய்திகள்

வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு வந்தபோது மாரடைப்பு: தமிழ் அறிஞர் கீ.த.பச்சையப்பன் மரணம்

வழக்கு விசாரணைக்காக சென்னை கோர்ட்டுக்கு வந்தபோது தமிழ் அறிஞர் கீ.த.பச்சையப்பன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன.

சென்னை,

சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் கீ.த.பச்சையப்பன்(வயது 84). தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், மொழிப்போராட்ட தியாகியும், தமிழ் அறிஞரும் ஆவார். தமிழ் உரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துவந்தார். தமிழ் மொழி மீது இவருக்கு இருந்த பற்று காரணமாக புலவர் பச்சையப்பன் என்று அழைக்கப்பட்டார்.

தமிழுக்காக போராடிய இவர், தமிழ் மொழி வளர்ச்சிக்காக குரல் கொடுத்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்களுடன் நெருக்கமாக இருந்துவந்தார். அவர், கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இந்தநிலையில் ஒரு வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள செசன்சு கோர்ட்டுக்கு நேற்று அவர் தனது மகன் தொல்காப்பியனுடன் வந்திருந்தார். கோர்ட்டு வளாகத்தில் நின்றுகொண்டிருந்தபோது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. நெஞ்சுவலியால் அவர் அங்கேயே சாய்ந்து விழுந்தார்.

உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கீ.த.பச்சையப்பன் ஏற்கனவே கண்தானம் செய்வதாக அறிவித்து இருந்தார். இந்த தகவலை அவரது மகன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்தியிடம் தெரிவித்தார். அதன்படி அவரது உடலில் இருந்து கண்கள் அகற்றப்பட்டு, வேறு நபர்களுக்கு தானம் செய்வதற்காக பத்திரப்படுத்தப்பட்டது.

கீ.த.பச்சையப்பன் மறைவுக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்