தமிழக செய்திகள்

ராஜேந்திர பாலாஜி கைதுக்கு எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்திய முன்னாள் எம்.எல்.ஏ. கைது

ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்திய முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மனை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

விருதுநகர்,

அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் கர்நாடகாவில் வைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவரை தனிப்படை போலீசார் நேற்று தமிழ்நாடு அழைத்து வந்தனர். பின்னர் ராஜேந்திரபாலாஜி விருதுநகர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அதன்பின்னர், ராஜேந்திரபாலாஜி விசாரணைக்காக நேற்று இரவு விருதுநகர் மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று இரவு விருதுநகர் கலெட்கர் அலுவலகம் முன் சாத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் அதிமுக கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நள்ளிரவில் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இதைனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டம் நடத்திய முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் மற்றும் அதிமுக நிர்வாகிகளை கைது செய்தனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு