தமிழக செய்திகள்

சென்னை மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் இன்று இலவசமாக பயணிக்கலாம் என அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரயிலில் இன்று பிற்பகல் 2 மணி முதல் இரவு 11 மணிவரை பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை,

இன்று தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி துவங்கி வைக்கிறார். அதன் ஒரு பகுதியாக சென்னை வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோநகர் இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

இதையொட்டி, இன்று மதியம் 2 மணியில் இருந்து இரவு 11 மணி வரை மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்ய பெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதித்துள்ளது. இதன்மூலம், விமான நிலையம்- திருவொற்றியூர் விம்கோநகர், பரங்கிமலை- சென்ட்ரல் இடையே மெட்ரோ ரெயிலில் பொதுமக்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு