சென்னை,
ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்ட போது கொரோனா நோய்த்தொற்று பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார ரெயில் சேவைக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
முதலில் அரசு ஊழியர்களுக்கும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. வார நாட்களில் அலுவலகத்திற்கு செல்லும் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு 660 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையன்று 401 மின்சார ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வரும் 15-ம் தேதி முதல் சென்னை மின்சார ரயில்களில், அனைத்து நேரங்களிலும் மாணவர்கள் பயணிக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.
முன்னதாக 9,10,11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகளும், கல்லூரிகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.