தமிழக செய்திகள்

தூய்மை காவலருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

தூய்மை காவலருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது.

தினத்தந்தி

ராஜபாளையம் அருகே உள்ள முகவூரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 45). முத்துசாமிபுரம் ஊராட்சியில் தூய்மை காவலராக பணியாற்றி வந்த இவர் விபத்தில் படுகாயம் அடைந்தார். உடனே அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 2 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவர் மூளை சாவு அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உறவினர்கள் சம்மதத்துடன் இவரது உடலில் இருந்து கல்லீரல், சிறுநீரகம் மற்றும் கண்கள் ஆகிய உறுப்புகள் மதுரை மற்றும் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு தானமாக வழங்கப்பட்டது. உயிரிழந்த மாரியப்பனின் உடல் நேற்று மாலை அவரது சொந்த ஊரான முகவூருக்கு கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக அரசு அறிவித்த படி அவரது உடலுக்கு கலெக்டர் ஜெயசீலன், வட்டாட்சியர் ராமச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு ப்ரீத்தி, சேத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் ஜெயலட்சுமி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு