தமிழக செய்திகள்

கஜா புயல் பாதிப்புகள்: தமிழகத்திற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் - மத்திய மந்திரி நட்டா

கஜா புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்காக, அனைத்து உதவிகளும் செய்யப்படும் என மத்திய மந்திரி நட்டா உறுதியளித்துள்ளார்.

சென்னை,

கஜா புயல் நேற்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குடிநீர் தேவைகள், மின்சாரம் துண்டிப்பு, போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜெ.பி.நட்டா, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கருடன், கஜா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தார். மேலும் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்