தமிழக செய்திகள்

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

புதுக்கடை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்காலை செய்து கொண்டார்.

புதுக்கடை:

புதுக்கடை அருகே காப்பிக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெகன். இவருடைய மனைவி மவுனிகா (வயது 26). இவர் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

ஜெகனுக்கும், மவுனிகாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே ஜெகன் வெளிநாட்டு வேலைக்கு சென்று விட்டார். அதன் பிறகு செல்போன் மூலம் பேசும் போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு படுக்கை அறைக்கு தூங்கச் சென்ற மவுனிகா நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் அறை கதவு திறக்கப்படாமல் இருந்தது.

உடனே அவரது தாயார் ஜன்னல் வழியாக பார்த்த போது மவுனிகா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் புதுக்கடை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். குடும்ப பிரச்சினையில் மவுனிகா தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு