தமிழக செய்திகள்

ஜெயங்கொண்டம் அரசு பள்ளியில் கோ-கோ போட்டி

ஜெயங்கொண்டம் அரசு பள்ளியில் கோ-கோ போட்டி நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 19, 17, 14 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்களுக்கான கோ-கோ போட்டி நடைபெற்றது. இதனை பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் தொடங்கி வைத்தார். போட்டியின் நடுவர்களாக மோகன், குமார், முத்து, மணிமேகலை, மயில்சாமி, சஞ்சய், சேகர், பாண்டியன், செந்தமிழ்ச்செல்வன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் செயல்பட்டனர். போட்டியில் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பிரிவில் கல்லாத்தூர் தண்டலை பள்ளி முதலிடமும், ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலை பள்ளி 2-வது இடமும், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் வடவீக்கம் ஆர்.சி. பாத்திமா பள்ளி முதலிடமும், வாணதிரையன் பட்டினம் பள்ளி 2-வது இடமும், 14 வயதுக்குட்பட்ட பிரிவில் உடையார்பாளையம் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், வாணதிரையான் பட்டினம் பள்ளி 2-வது இடமும் பிடித்தனர்.

19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் மீன்சுருட்டி மகளிர் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி 2-வது இடமும், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் பாத்திமா பெண்கள் பள்ளி முதலிடமும், வடவீக்கம் ஆர்.சி. பாத்திமா பள்ளி 2-வது இடமும், 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் மீன்சுருட்டி பெண்கள் பள்ளி முதலிடமும், ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் பள்ளி 2-வது இடமும் பெற்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை ஜெயங்கொண்டம் குறுவட்ட இணை செயலாளர் ஷாயின்ஷா செய்திருந்தார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு