தமிழக செய்திகள்

மதுரை அவனியாபுரம் அருகே சிறப்பு அலங்காரத்தில் வராகி அம்மன்

மதுரை அவனியாபுரம் அருகே வராகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

அவனியாபுரம், 

அவனியாபுரம் அடுத்து ரிங்ரோடு பகுதியில் சொர்ண வராகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர் உள்பட 21 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. மேலும் சிறப்பு ஹோமம் நடைபெற்றது . மேலும் பெண்கள் கும்மி பாட்டு பாடல் மூலமாக நாட்டில் மழை பெய்ய வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டும். அனைவரும் வளமாக வாழ வேண்டும் என்று பாடல் பாடி அம்மனை வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பூசாரி மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் திருப்பரங்குன்றம் மேலப்பச்சேரியில் உள்ள ஸ்ரீகோட்டை வராகி அம்மன் வழிபாட்டு மன்றத்தில் நேற்று தேய்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் வராகி அம்மன் அருள்பாலித்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்