தமிழக செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது.

சென்னை

சென்னை, உக்ரைன் - ரஷியா போர் மற்றும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. எனினும் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது.

இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.38,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்ந்து ரூ4,850-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.63.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.63,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

SCROLL FOR NEXT