தமிழக செய்திகள்

பெரியார் சிலை மீது காலணி வீசிய வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

சென்னையில் பெரியார் சிலை மீது காலணி வீசியதால் கைதான வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தந்தை பெரியாரின் 140-வது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை அண்ணாசாலை சிம்சன் சந்திப்பில் உள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். அப்போது அங்கு வந்திருந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெகதீசன் (35) திடீரென பெரியார் சிலை மீது காலணி வீசினார். அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அவர் எதற்காக பெரியார் சிலை நோக்கி காலணி வீசினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் கைதான வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்