தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் விஜய்யுடன் அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு

அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை சந்தித்து பேசினார்கள்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை இன்று (29-ந் தேதி) சென்னை தலைமைச்செயலகத்தில் மாநில தலைமை தகவல் ஆணையர் முகமது ஷகில் அக்தர், மாநில தகவல் ஆணையர்கள் அபய் குமார் சிங், பி.தாமரைக்கண்ணன், ஆர்.பிரியகுமார், கே.திருமலைமுத்து, வி.பி.இளம்பரிதி, எம்.நடேசன், ஏ.விஜயராம் ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.

இதேபோல், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் வேலுசாமி, முதல்-அமைச்சர் ஜோசப் விஜயை சந்தித்து பேசினார். மேலும், செயின்ட்-கோபைன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் என்.ஸ்ரீதர், மேலாண்மை இயக்குநர் ஏ.ஆர்.உன்னிகிருஷ்ணன், மனிதவளத் தலைவர் யுவராஜ் ஆகியோரும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை சந்தித்து பேசினார்கள்.