நெல்லை,
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள சுங்கச்சாவடியில் அரசுப் பேருந்து தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திசையன்விளையில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற அரசு பேருந்தின் பாஸ்டாக்கில் பணம் இல்லாததால், பேருந்து செல்ல சுங்கச்சாவடி ஊழியர்கள் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பயணிகளுக்கும், பேருந்து நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சமரசம் ஏற்பட்டதை அடுத்து, பேருந்து செல்ல சுங்கச்சாவடி ஊழியர்கள் அனுமதித்தனர்.