உள்ளாட்சிகள் தினத்தையொட்டி அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளில் வருகிற 1-ந் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சென்னையிலிருந்து பெறப்பட்ட கூட்டப்பொருட்கள் மற்றும் இதர கூட்டப்பொருட்கள் விவாதிக்கப்படும். கிராம சபை கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துத்துறை அலுவலர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.