தமிழக செய்திகள்

சிவகாசி பகுதியில் கடும் பனி

சிவகாசி பகுதியில் கடும் பனியால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

தினத்தந்தி

சிவகாசி

சிவகாசி பகுதியில் கடும் பனியால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

கோடை வெயில்

சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடையில் அடிப்பது பால வெயில் அடித்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு லேசான சாரல் மழை பெய்தது.

இருப்பினும் எதிர்பார்த்த அளவு மழை இல்லை. ஆனாலும் வெயிலின் தாக்கம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பனி மூட்டம் அதிகமாக இருக்கிறது.

பனி மூட்டம்

அதிலும் குறிப்பாக நேற்று காலை 7 மணி வரை சிவகாசியில் வழக்கத்தை காட்டிலும் பனி மூட்டம் அதிகமாக இருந்தது. சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்றனர்.

கடுமையான பனி காரணமாக சைக்கிளில் சென்றவர்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டனர். வழக்கமான நடைபயிற்சி செல்பவர்கள் பனி மூட்டம் காரணமாக நடைபயிற்சியை தவிர்த்தனர். சென்னையில் இருந்து சிவகாசி வழியாக செங்கோட்டை சென்ற பொதிகை எக்ஸ்பிரஸ் இரவு நேரத்தில் செல்வது போல் விளக்குகளை எரியவிட்டப்படி சென்றது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது