தமிழக செய்திகள்

உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் கே.மணிவண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரவி வரவேற்றார். பொருளாளர் காமராஜ் முன்னிலை வகித்தார். கண்டன ஆர்ப்பாட்டத்தை மாவட்ட தலைவர் கே.மனோகரன் தொடங்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் தனி முன்னுரிமை, அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் 8 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம், பள்ளிகளின் மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதில் முதுகலை ஆசிரியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் பாலாஜி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் தேசிங்கு ராஜன், தமிழக தலைமை ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் மாவட்ட இணை செயலாளர் சங்கர் நன்றி கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்