தமிழக செய்திகள்

புனித வியாகுல அன்னை ஆலய தேர் பவனி

புனித வியாகுல அன்னை ஆலய தேர் பவனி நடைபெற்றது.

தினத்தந்தி

ஆலங்குடி அருகே அரசடிபட்டியில் புனித வியாகுல அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த 19-ந் தேதி ஆலய பங்குத் தந்தை அமுல் வில்லியம் கூட்டுப்பாடல் திருப்பலி பூஜையுடன் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தினந்தோறும் கிராம பொதுமக்களால் காலை முதல் மாலை வரை தேர்பவனி மற்றும் நவநாள் திருப்பலி மன்றாட்டு பாடல் பாடி கலை நிகழ்ச்சி நடந்தது. அரசடிபட்டி பங்குத்தந்தை அமுல் வில்லியம் மற்றும் கிராம பங்கு தந்தையர்கள், அருட் சகோதரிகள் விழா கூட்டுப்பாடல் திருப்பலியுடன் மேள தாளம் வாணேவடிக்கைகள் முழங்க தேர் பவனி நடந்தது. இதனை தொடர்ந்து சிறுமிகளுக்கு முதல் திருவிருந்து நடைபெற்றது. தொடர்ந்து நடந்த தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக சுற்றி வந்து கோவிலை வந்தடைந்தது. இதில் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பங்குத்தந்தையர்கள், அருட் ச கோதரிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை