தமிழக செய்திகள்

பலத்த மழைக்கு வீடு சேதம்

கோபால்பட்டி அருகே பலத்த மழைக்கு வீடு சேதமடைந்தது.

கோபால்பட்டி அருகே உள்ள கன்னியாபுரத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 62). விவசாயி. இவர் தனது மனைவி மற்றும் மகன்கள், பேரக்குழந்தைகள் என 7 பேருடன் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர்.

அப்போது இரவில் பலத்த மழை பெய்தது. இதில், ராமனின் வீட்டின் பக்கவாட்டு சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. அந்த சுவர் வீட்டின் வெளிப்புறமாக விழுந்ததால், அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். வீடு சேதம் குறித்து தகவல் அறிந்த அஞ்சுகுளிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மகேஷ்வரன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்