தமிழக செய்திகள்

மனைவியின் கள்ளக்காதலனை நாயை ஏவி கடிக்க வைத்த கணவன்

மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபரை தன் வீட்டில் வளர்த்து வரும் நாயை ஏவி கணவன் கடிக்க வைத்துள்ளார்.

தினத்தந்தி

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் நாகராஜன் (30 வயது). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 32 வயது வாலிபரின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நாகராஜனுக்கும், வாலிபருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த வாலிபர், தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நாகராஜனை தன் வீட்டில் வளர்த்து வரும் நாயை ஏவி கடிக்க வைத்துள்ளார்.

இதில் காயமடைந்த நாகராஜன், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது