தமிழக செய்திகள்

“என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்” - மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலடி

திமுக தலைவர் ஸ்டாலின் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை,

கோவையில் நடந்த கொரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எப்படியாவது முதல்-அமைச்சர் நாற்காலியை பிடிக்க வேண்டும் என்று ஆதாரமில்லாத, அவதூறான குற்றச்சாட்டுகளை முதல்-அமைச்சர் மீதும், அமைச்சர்கள் மீதும் கொடுத்து உள்ளார்.

குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கலாம் என்று எண்ணிய அவருக்கு நாங்கள் தடையாக இருப்பதால் எங்கள் மீது ஆதாரமின்றி குற்றச்சாட்டுகளை கூறுகிறார். அவர் என் மீது கொடுத்த குற்றச்சாட்டு உண்மை என்றால் நான் பதவி விலக தயார். அந்த குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாவிட்டால் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் பதவி, தி.மு.க. தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயாரா?.

தொண்டாமுத்தூரில் என்னுடைய தொகுதிக்கு வந்து குண்டர்களை வைத்து தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 4 முதல் 5 பேர் மீது மு.க.ஸ்டாலின் தாக்குதல் நடத்தி இருக்கிறார். அதில் ஒரு பெண்ணும் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்