தமிழக செய்திகள்

நடிகர் விவேக் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன் - முதலமைச்சர் பழனிசாமி

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் விவேக் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

நடிகர் விவேக்கிற்கு நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள் நடிகர் விவேக்கிற்கு இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீர்செய்ய 'எக்மோ' கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இன்னும் 24 மணி நேரத்திற்கு பிறகே அவரது உடல்நிலை குறித்து முழுமையான அறிக்கையை தெரிவிக்க முடியும் என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் விவேக் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்வதாக அரசியல் தலைவர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேட்டு மனவேதனை அடைந்தேன். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உள்ளிட்டோரும் நடிகர் விவேக் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு