தமிழக செய்திகள்

‘தமிழக அரசியலில் புரட்சி ஏற்படுத்த எனக்கு ஆசை’ ரஜினிகாந்த் பேச்சு

தமிழக அரசியலில் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று எனக்கு ஆசை என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். #Rajinikanthspeech

தினத்தந்தி

சென்னை,

தனிக் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், நேற்று சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பத்திரிகையாளர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது, பத்திரிகையாளர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பேசியதாவது:-

நானும் 2 மாதங்கள் பத்திரிகையில் பணிபுரிந்து இருக்கிறேன். பெங்களூருவில் இருக்கும்போது, எஸ்.எஸ்.எல்.சி.யில் பெயில் ஆன பிறகு, படிக்க நீ லாயக்கு இல்லை என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்லி, வேலைக்கு போக சொன்னார்கள்.

என் நண்பர் ராமச்சந்திரன் தமிழ் கர்நாடகா என்னும் பத்திரிகையில் பிழை திருத்துபவராக இருந்தான். அவன் மூலம் வேலை கிடைத்தது. அவனுடன் 2 மாதங்கள் பிழை திருத்துபவராக வேலை பார்த்திருக்கிறேன்.

அதன்பின்னர், சினிமா துறையில் எனது முதல் நேர்முகத் தேர்வு பொம்மை என்னும் நாடகத்திற்காக. அது 1976-ல் என்று நினைக்கிறேன். உண்மையிலேயே நான் ஒரு மீடியாவை பார்த்து நடுங்குபவன். இப்படி நிக்கணும், அப்படி நிக்கணும், இந்த கேள்வி கேட்கணும், அந்த கேள்வி கேட்கணும் என்று என்னை திணறடிச்சுடுவாங்க. பட விழாவுக்கு சென்றாலும் எனக்கு அங்கு பேசுவதில் பயம் இருந்தது.

1996-ம் ஆண்டு காலத்திலேயே அந்த மீடியா பயம் எனக்கு இருந்துச்சு. இப்போ அரசியல் அறிவிப்புக்கு பிறகும் எப்படி இதனை சமாளிப்பது என்று எனக்கு தெரியல. சொல்ல வேண்டியதை எல்லாம் கூட்டத்திலே சொல்லிடுறேன். அப்புறம் பேட்டியில என்ன சொல்றதுனு குழப்பமா இருக்கு. கேமராவ பாத்ததும் டக்குனு பேச முடியல.

இதுக்கெல்லாம் (அரசியல்) நான் புதுசு. உங்க ஒத்துழைப்பு இல்லாம நான் எதுவுமே செய்யமுடியாது. எனவே நான் அப்பப்போ ஏதாவது தப்பு செஞ்சிருந்தா தயவுசெஞ்சு மன்னிசுக்கோங்க.

எல்லோருக்கும் பொறுப்பு இருக்கு. எல்லாமே தமிழகத்தில் இருந்து தான் தொடங்குது. இங்கிருந்து தொடங்கி, அரசியலில் ஒரு புரட்சியை ஏற்படுத்துனும்னு எனக்கு ஆசை. அது இந்த தலைமுறையில் நடக்கனும்னு எல்லாரும் ஆசைப்படுறாங்க. எல்லாம் உங்க ஒத்துழைப்பு இல்லாம நடக்காது. உங்க தொடர்பு இருந்துகொண்டே இருக்கணும். ஒரு முறையான பத்திரிகையாளர் சந்திப்பு விரைவில் நடக்கும். அப்போது உங்களை சந்தித்து நிறைய பேசறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது