சென்னை,
அதிமுக இணைஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஆப்பிள் ஐபோன்களை தயாரிக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் கடந்த அம்மா அரசு ஆட்சியிலேயே போடப்பட்டது ஆனால் வழக்கம் போல் இதையும் தங்கள் சாதனை போல காட்டி கொள்ள முயலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நினைவு படுத்துகிறேன்.
இது #MakeinTamilnadu (மேக் இன் தமிழ்நாடு) தான் ஆனால் #MadebyAmmaArasu (மேட் பை அம்மா அரசு)
எனது தலைமையிலான அம்மாவின் ஆட்சியிலேயே 2019 ஆம் வருடம் ஒப்பந்தம் போடப்பட்டு 2020 ஆம் ஆண்டே பாக்ஸ்கான் நிறுவன ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பை சென்னையில் உற்பத்தி செய்யும் பணியை துவங்கி விட்டது என்று தெரிவித்துள்ளார்.