தமிழக செய்திகள்

சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி

சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

முதுகுளத்தூர், 

முதுகுளத்தூரில் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் வாவா ராவுத்தர் தலைமை தாங்கினார். நகர தலைவர் சேட் ஜாகிர் உசேன் முன்னிலை வகித்தார். த.மு.மு.க. மாவட்ட செயலாளர் சம்சுகனி, மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாவட்ட துணை செயலாளர் சல்மான் ரபீக் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக இஸ்லாமிய பிரசார பேரவை மாவட்ட பொறுப்பாளர் தாஹிர் சைபுதீன், துரைப்பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் முருகன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பூவலிங்கம், இமாம் அப்துல் மஜீத், ஓம் சக்தி வழிபாட்டு மன்ற குழு தலைவர் பழனிச்சாமி மற்றும் முஸ்தபாபுரம் ஜமாத்தார்களும், வார்டு நிர்வாகிகளும் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜமீல் அகமது நன்றி கூறினார். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்