தமிழக செய்திகள்

உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யத்தில் பரவலாக மழை பெய்ததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் பகுதியில் வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் பகலில் வெளியே செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கி கிடந்தனர். பகலில் சுட்டெரிக்கும் வெப்பத்தின் தாக்கம் இரவிலும் காணப்பட்டது. வீடுகளில் மின்விசிறியில் இருந்து அனல்காற்று வீசியது. வெப்பம் காரணமாக வேதாரண்யம் வேதாமிர்த ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன. அவ்வப்போது மழை பெய்து வருகிறது.இதனால் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மழை பெய்தது. மழை காரணமாக விவசாய பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இந்த மழையினால் உப்பு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உப்பள தொழிலாளாகள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்