தமிழக செய்திகள்

அமைந்தகரையில் விபசார அழகிக்கு உடந்தையாக இருந்த போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம்

அமைந்தகரையில் விபசாரத்தில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இருவரும் பல பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பூந்தமல்லி,

சென்னை சூளைமேடு கிழக்கு நமச்சிவாயம் தெருவை சேர்ந்தவர் ஜெயந்தி (வயது 37). இவர் நேற்று முன்தினம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு, அரும்பாக்கம் என்.எஸ்.கே. பஸ் நிறுத்தம் அருகே நின்றபோது வாலிபர் ஒருவர் தனது கைப்பையை பறிக்க முயன்றதாகவும், அவரை பிடித்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுபற்றி அமைந்தகரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அமைந்தகரை போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர், தன்னை பாலியல் உறவுக்கு அழைத்து வந்து பணம், மோட்டார்சைக்கிளை ஜெயந்தி பறித்துக்கொண்டதாகவும், இதற்கு ஒரு போலீஸ் ஏட்டு உதவியாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

அப்போது தான் ஜெயந்தி கூறிய தகவல் அனைத்தும் பொய்யானது என போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். ஜெயந்தியின் செல்போனை ஆய்வு செய்தபோது, கோயம்பேடு பஸ் நிலைய போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்த பார்த்திபன் (43) என்பவருடன் அடிக்கடி பேசி இருப்பது தெரியவந்தது.

ஜெயந்தியும், பார்த்திபனும் இணைந்தே விபசார தொழில் செய்து வந்ததும் தெரிந்தது. இந்த தகவலை கேட்டதும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், போலீஸ் ஏட்டு பார்த்திபனுக்கும், ஜெயந்திக்கும் இடையே நீண்ட காலமாக தொடர்பு இருந்துள்ளது.

விபசாரம் செய்து வந்த ஜெயந்திக்கு பார்த்திபன் உதவி செய்து வந்துள்ளார். ஜெயந்தி, கோயம்பேடு பஸ் நிலையத்தில் இரவு நேரங்களில் வெளியூர் செல்லும் இளைஞர்களை குறி வைத்து விபசாரத்திற்கு அழைத்து செல்வார். அப்போது போலீஸ் கெடுபிடி அதிகமாக இருந்தால், அவரை போலீசில் சிக்காமல் பார்த்திபன் பார்த்துக்கொள்வார்.

இதையடுத்து அவர்கள் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமானது. போலீஸ் ஏட்டு உதவியாக இருப்பதால் ஜெயந்தி சுதந்திரமாக விபசாரம் செய்து வந்தார். நாளடைவில் அந்த தொழிலில் பார்த்திபனும் கூட்டு சேர்ந்துள்ளார். இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைந்தகரை பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்