தமிழக செய்திகள்

பவானியில் ஈரோடு ஆதீனம் கார் கண்ணாடி உடைப்பு

பவானியில் ஈரோடு ஆதீனம் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

பவானி

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் குருக்களாக பணியாற்றி வருபவர் பாலாஜி சிவம் (வயது 50). மேலும் இவர் ஈரோடு ஆதீனமாகவும் இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் சொந்த வேலையாக சேலம் மாவட்டம் சங்ககிரிக்கு காரில் சென்று விட்டு மீண்டும் இரவில் வீட்டுக்கு வந்தார். பின்னர் காரை வீட்டின் அருகே உள்ள செட்டில் நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் வீட்டில் இருந்து சங்கமேஸ்வரர் கோவிலுக்கு புறப்பட்டார். அப்போது வீட்டின் அருகே நிறுத்தப்பட்ட அவருடைய காரின் முன் பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் உடைக்கப்பட்ட காரின் அருகே ஒரு செங்கல்லும் வைக்கப்பட்டிருந்தது. உடனே அவர் இதுகுறித்து பவானி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் வீராவும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. ஆனால் மோப்பநாய் அந்த பகுதியில் மோப்பம் பிடித்தபடி காரை சுற்றி வந்து நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. முன்விரோதம் காரணமாக கார் கண்ணாடி உடைக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு