தமிழக செய்திகள்

சென்னையில், மண்டல வாரியாக கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவருவோர் விவரம்

சென்னையில், மண்டல வாரியாக கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை :

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 70,017 ஆக உள்ளது. 1,082 பேர் உயிரிழந்த நிலையில், 44,882 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

24,852 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தவிர்த்து பிற மாவட்டங்களை சேர்ந்த 1,162 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 58.24 சதவீதம், பெண்கள் 41.76 சதவீதம். நேற்று மட்டும் சென்னையில் 9,514 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில், மண்டல வாரியாக கெரேனா பாதிப்பு விவரம் பின்வருமாறு:-

திருவொற்றியூர் - 1,243

மணலியில் 551

மாதவரத்தில் 909

தண்டையார்பேட்டை 1,810

ராயபுரம் 1,999 பேரும்

திருவிக நகர் 1,898

அம்பத்தூர் 1,314

அண்ணா நகர் 2,383

தேனாம்பேட்டையில் 2,447

கேடம்பாக்கத்தில் 2,990

வளசரவாக்கத்தில் 1,228

ஆலந்தூர் 968

அடையாறு 1,673

பெருங்குடியில் 890

சோழிங்கநல்லூர் 587 பேரும் கெரேனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு