தமிழக செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் 1,597 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்; நாளை மறுநாள் நடக்கிறது

ஈரோடு மாவட்டத்தில் 1,597 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை மறுநாள் நடக்கிறது.

தினத்தந்தி

ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனா 4-ம் அலை பரவுவதை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது. இந்த முகாம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் உட்பட மொத்தம் 1,597 மையங்களில் நடைபெறுகிறது.

முகாமில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசியும், 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை செலுத்தி 6 மாதம் கடந்தவர்கள் அனைவருக்கும் முன் எச்சரிக்கை தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசியும் இலவசமாக செலுத்தப்பட உள்ளது.

இந்த முகாமில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு