தமிழக செய்திகள்

தேனியில் லாரி மோதி பெண் படுகாயம்

தேனியில் லாரி மோதியதில் பெண் படுகாயம் அடைந்தார்.

தினத்தந்தி

தேனி அருகே உப்புக்கோட்டையை சேர்ந்த லட்சுமணன் மனைவி சின்னபொன்னு (வயது 48). நேற்று முன்தினம் இவர், தேனி பழைய பஸ் நிலையம் முன்பு சாலையை நடந்து கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேல்புதூரை சேர்ந்த மல்லிகிராம் (47) என்பவர் ஓட்டி வந்த லாரி, சின்னபொன்னு மீது மோதியது. இதில் கீழே விழுந்த அவரின் காலில் லாரி சக்கரம் ஏறியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சின்னபொன்னு கொடுத்த புகாரின் பேரில், மல்லிகிராம் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது