தமிழக செய்திகள்

மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரையில் கடந்த மாதத்திலிருந்தே கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் தினமும் புதிய உச்சத்தை தொட்டே அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்ட நடவரிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி மேலும் 235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 11,073ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 8,221 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 2,384 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரையில் கொரோனா தொற்றால் இதுவரை 233 பேர் உயிரிழந்துள்ளனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு