தமிழக செய்திகள்

போடியில் போலீஸ் நிலைய சுவர் இடிந்து விழுந்தது

போடியில் போலீஸ் நிலைய சுவர் இடிந்து விழுந்தது

தினத்தந்தி

போடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று போடி மகளி போலீஸ் நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இந்த சுவர் அருகே உள்ள இருக்கையில் தான் புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் அமர்வார்கள். சுவர் இடிந்து விழும் போது பொதுமக்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. சுவர் இடிந்து சாலையோரம் சென்ற கழிவு நீர் கால்வாய் மீது விழுந்தது. இதனால் கால்வாய் மூடியதால் கழிவு நீர் செல்ல வழியில்லாமல் சாலையில் ஓடியது. 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது