தமிழக செய்திகள்

திருவண்ணாமலையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை நியமன அலுவலர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்..!

தமிழ்நாடு வருவாய்த்துறை குரூப் -2 நேரடி நியமன அலுவலர்கள் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை,

தமிழ்நாடு வருவாய்த்துறை குரூப் -2 நேரடி நியமன அலுவலர்கள் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், துணை வட்டாட்சியர் பட்டியல்கள் மறுவரையறை செய்து வெளியிடப்படுவதை உறுதி செய்து திருத்திய வட்டாட்சியர், துணை ஆட்சியர் பட்டியல்களை வெளியிட வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் துணை வட்டாட்சியர் பதவி உயர்வு பட்டியலை வெளியிட்டு துணை வட்டாட்சியர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் .

வருவாய்த்துறையில் தற்போதைய அதிகமான பணிச்சுமை கருத்தில்கொண்டு சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் மற்றும் பிறப்பு இறப்பு பதிவு மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணவும் ,பேரிடர் மேலாண்மை தொடர்பான பணிகளை செயல்படுத்தவும் துணை வட்டாட்சியர் நிலையில் ஒரு பணியிடம் உருவாக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் .

நேரடி நியமன உதவியாளருக்கு பயிற்சிகளை ஐந்து ஆண்டுக்குள் முறையாக வழங்க வேண்டும். மேலும் ஐந்து ஆண்டுகள் பயிற்சி முடித்த நேரடி நியமன உதவியாளருக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர், மாவட்ட பொருளாளர் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்