கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள காப்பர் பொருட்கள் திருட்டு - 4 ஊழியர்கள் தற்காலிக பணிநீக்கம்

தூத்துக்குடி அரசு அனல் மின் நிலையத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள குப்ரோ நிக்கல் பைப்புகள் கடத்தப்பட்ட சம்பவத்தில், 4 ஊழியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

தூத்துக்குடி,

தூத்துக்குடி அரசு அனல் மின் நிலையத்தில், பல கேடி ரூபாய் மதிப்புள்ள குப்ரே நிக்கல் பைப்புகள் கடத்தப்பட்ட சம்பவத்தில், 4 ஊழியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் உள்ள பொருள் வைப்பு அறையில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள காப்பர் மற்றும் நிக்கல் கலந்த குப்ரோ நிக்கல் பைப் உள்ளிட்ட உதிரி பாகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பெருள் வைப்பு அறையை படகு மூலம் வந்து துளையிட்டு அதிலிருந்து 690 கிலே எடை கெண்ட 829 குப்ரே நிக்கல் பைப்பு உள்ளிட்ட உதிரிபாகங்களை 15-க்கும் மேற்பட்ட கும்பல் கடத்திச் சென்றுள்ளது.

2 நாட்களுக்குப் பின்னரே கடத்தல் சம்பவம் நிர்வாகத்திற்கு தெரியவந்துள்ளது. சம்பவம் தெடர்பாக 4 ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி தெர்மல் நகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு