தமிழக செய்திகள்

புதிய ரேஷன் கடை திறப்பு விழா

புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது

தினத்தந்தி

சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட விஸ்வநத்தம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.12 லட்சம் செலவில் கட்டப்பட்ட இந்த புதிய ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து தலைவர் சக்திவேல் நாகராஜ் தலைமை தாங்கினார். சிவகாசி ஒன்றிய துணைத்தலைவர் விவேகன்ராஜ் புதிய ரேஷன்கடையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பஞ்சாயத்து துணை தலைவர் நாகேந்திரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி, ஆலாவூரணி வெங்கடேசன், வைரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலாளர் செல்வம் செய்திருந்தார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை