தமிழக செய்திகள்

வருமானவரி சோதனை; எதிர்க்கட்சிகள் மீது நடத்தப்படும் அடக்குமுறை - கார்த்தி சிதம்பரம் எம்.பி. குற்றச்சாட்டு

வருமானவரி சோதனை என்பது எதிர்க்கட்சிகள் மீது நடத்தப்படும் அடக்குமுறை என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

காரைக்குடி,

காரைக்குடி திருவள்ளுவர் திருநகரில் காரைக்குடி சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் தேர்தல் அலுவலகத்தினை கார்த்திக் சிதம்பரம் எம். பி. திறந்து வைத்தார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் தி.மு.க.தலைமையிலான கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவரும்.

வருமான வரி சோதனை என்பது தேர்தல் காலத்தில் எதிர்க்கட்சிகள் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறை நடவடிக்கையாகும். ஜனநாயக ரீதியாக பா.ஜ.க.வால் வெற்றி பெறமுடியாது. தமிழகத்தில் பா.ஜ.க. புறக்கணிக்கப்பட்ட கட்சியாகவே தோன்றுகிறது.

இவ்வாறு அவர்கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்