தமிழக செய்திகள்

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் உபரிநீரின் அளவு 15,000 கனஅடியாக அதிகரிப்பு

கபினி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து கொண்டே உள்ளது . நேற்று மாலை கபினி அணை நிரம்பியதால் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

சேலம்

மைசூர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை எதிரொலியாக, கபினி அணை நிரம்பி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் உபரிநீரின் அளவு 15,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டுவதால் தமிழகத்திற்கு உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

கபினி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து கொண்டே உள்ளது . நேற்று மாலை கபினி அணை நிரம்பியதால் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 626 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.அது தற்போது 15,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.

அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 333 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதுபோல மாண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று 101 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்