தமிழக செய்திகள்

வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்வு..!

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம், பீர், ஒயின் விலையை டாஸ்மாக் நிர்வாகம் உயர்த்தியது.

சென்னை,

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.  இதுகுறித்து அரசுக்கு பல்வேறு புகார்கள் வந்ததால் 10 ரூபாய் அதிகம் வாங்கும் டாஸ்மாக் கடை விற்பனையாளர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அரசு இப்போது அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம், பீர், ஒயின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. குவாட்டருக்கு ரூ.10 முதல் முழு பாட்டிலுக்கு ரூ.320 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மதுபானங்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு