தமிழக செய்திகள்

கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடக்கம்

கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடங்கப்பட்டது.

தினத்தந்தி

பாடாலூர்:

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட தொடக்க விழா பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டாரத்தில் இரூர், நாரணமங்கலம், காரை, நக்கசேலம், கீழமாத்தூர், அல்லிநகரம் ஊராட்சிகளில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் அந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்ததை, ஆலத்தூர் வட்டாரத்தில் விவசாயிகள் நேரலையில் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் இரூர் ஊராட்சியில் ஆலத்தூர் ஒன்றியக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் விவசாயிகளுக்கு வேளாண்மை துறையின் சார்பாக தென்னங்கன்றுகள், கைத்தெளிப்பான்கள், ஒரு விசைத் தெளிப்பான், உளுந்து விதை உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்