சென்னை,
நாட்டில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. எனினும் கொரோனா பாதிப்புகள் பெருமளவில் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில நாட்களாக புதுவகையான கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நாடுகளும் இங்கிலாந்து நாட்டுடனான விமான போக்குவரத்துக்கு தடை விதித்து உள்ளது.
இந்நிலையில், தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை வழங்கியுள்ள அறிவுறுத்தலில், இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்தவர்கள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று
தெரிவித்து உள்ளது.
கடந்த நவம்பர் 25ந்தேதி முதல் டிசம்பர் 23ந்தேதி வரை வந்தவர்கள் தாமாக முன் வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதில் ஏதேனும் ஏற்படும் சந்தேகங்களுக்கு 104 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.