தமிழக செய்திகள்

அரியலூர் ரெயில் நிலையத்தில் தீவிர சோதனை

அரியலூர் ரெயில் நிலையத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

தினத்தந்தி

பலத்த பாதுகாப்பு

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று(திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரியலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி 900-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் அரியலூர் மாவட்ட எல்லை பகுதிகள், ரெயில் நிலையம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கடைவீதிகள், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகளில் (லாட்ஜ்) போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தீவிர சோதனை

அரியலூர் உட்கோட்ட துணை சூப்பிரண்டு சங்கர் கணேஷ், இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார், ரெயில் நிலையத்தில் மெட்டல் டிடெக்டர், மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். மாவட்ட எல்லைகள் மற்றும் முக்கிய பிரதான சாலைகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை