தமிழக செய்திகள்

புதிய கல்விக் கொள்கையிலும் திமுக இரட்டை வேடம் போடுகிறதா? டிடிவி தினகரன் கேள்வி

எல்லாவற்றையும் போல மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையிலும் திமுக இரட்டை வேடம் போடுகிறதா?” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் டுவிட்டர் பதிவில் உள்ள விவரம் வருமாறு:-

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை செயல்படுத்தமாட்டோம் என்று கூறி வந்த தி.மு.க. அரசு, தற்போது அந்த கல்விக்கொள்கைப்படி 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான தேர்வு முறையில் மாற்றங்கள் செய்திருப்பது ஏன்?.

எல்லாவற்றையும் போல இதிலும் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறதா?. மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடைய இந்த பிரச்சினையில், நீட் தேர்வு விவகாரத்தைப்போல தி.மு.க. அரசு நாடகமாடக்கூடாது. புதிய கல்விக்கொள்கை குறித்த தி.மு.க. அரசின் நிலைபாடு என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு