தமிழக செய்திகள்

அரசுக்கு பெருமளவு வருவாய் வருவதால் ‘டாஸ்மாக் கடைகளை மூட சாத்தியம் இல்லை’: பொன்னையன்

மாநிலத்தில் அரசுக்கு பெருமளவு வருவாய் மதுக்கடைகள் மூலம் வருவதால் மாற்று வழிகளை கண்டுபிடிக்கும் வரையில் டாஸ்மாக் கடைகளை மூட சாத்தியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்கள் அனைவருக்குமான சிறப்பான ஆட்சியை தந்து வருவதாகவும், அ.தி.மு.க.வே மீண்டும் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றும் என்றும் உறுதி தெரிவித்துள்ளார்.

அரசியல் ரீதியாக தீய சக்தி என்று எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்ட தி.மு.க.தான் எங்களுக்கு எதிரி என்றும், கூட்டணி கட்சிகளுடன் எங்களுக்கு எந்த முரண்பாடு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சசிகலா விவகாரம் குறித்து பேசுகையில், கட்சியில் உறுப்பினராக இல்லாத ஒருவர் எப்படி பொது செயலாளராக நீடிக்க முடியும்? என்று தெரிவித்த அவர், அரசுக்கு வருமானம் வரக்கூடிய அனைத்து வழிகளும் ஜி.எஸ்.டி. என்ற பெயரில் மைய அரசுக்கு சென்று விட்டதாகவும், அதில் தரவேண்டிய பங்கு தொகை கூட சரியாக வருவதில்லை என்றும் குறை கூறியுள்ளார்.

எனவே மாநிலத்தில் அரசுக்கு பெருமளவு வருவாய் மதுக்கடைகள் மூலம் வருவதால் மாற்று வழிகளை கண்டுபிடிக்கும் வரையில் டாஸ்மாக் கடைகளை மூட சாத்தியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜெயலலிதா சொத்துகள் பறிமுதல் செய்யப்படுமா? தினகரனை கண்டு அ.தி.மு.க.வுக்கு அச்சமா? சசிகலா பற்றி பாரதீய ஜனதா கருத்து? உள்பட சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜசேகரின் சரமாரி கேள்விகளுக்கு பொறுமையாக பதில் தெரிவித்துள்ளார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு