சென்னை,
கேரள மாநிலம் திருச்சூரை தலைமை அலுவலகமாக கொண்டு ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடை இயங்கி வருகிறது. அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர், மலேசியா என 11 நாடுகளிலும், இந்தியாவில் 11 மாநிலங்களிலும், தமிழ்நாட்டில் 21 இடங்களிலும் இந்த நகைக்கடைகள் செயல்படுகின்றன. நாடு முழுவதும் 130 இடங்களில் ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடைகள் உள்ளன. இந்த நகைக்கடைகளில், மத்திய அரசின் வழிக்காட்டுதலின்படி விற்பனை நடைபெறாமல், பல கோடி வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நாடு முழுவதும் 130 இடங்களில் உள்ள இந்த நகைக்கடைகளில் ஒரே நேரத்தில் அதிரடியாக நேற்று சோதனை நடந்தது. வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையால் வேலைக்கு வந்த நகைக்கடை ஊழியர்கள் கடைக்குள் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில், 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். #ITRaid | #IncomeTaxRaid | #Joyalukkas