கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

ஜனவரி 27: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. இதன்படி பெட்ரோல் விலை ரூ.88.82 ரூபாய்க்கும், டீசல் விலை ரூ.81.71 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல் அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 88.60 ரூபாய், டீசல் லிட்டர் 81.47 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 22 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.88.82 ரூபாய்க்கும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 24 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.81.71 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நடைமுறை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு