தமிழக செய்திகள்

செஞ்சி அருகே விவசாயி வீட்டில் நகை-பணம் திருட்டு

செஞ்சி அருகே விவசாயி வீட்டில் நகை-பணம் திருடுப்போனது.

தினத்தந்தி

செஞ்சி

செஞ்சி அருகே உள்ள கோனை என்ற ஊரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் கணேசன்(வயது 65). விவசாயி. இவருடைய மனைவி கன்னிகா. நேற்று முன்தினம் மதியம் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றனர். பின்னர் மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது.

இதைபார்த்து அதிச்சியடைந்த கணேசன், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 11 பவுன் நகைகள், ரூ.4 ஆயிரத்து 600 ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்து நகை பணத்தை திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் அனந்தபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிச்சென்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது