தமிழக செய்திகள்

பெண்ணிடம் நகை பறிப்பு; முகநூல் நண்பர் கைது

நெல்லையில் பெண்ணிடம் நகை பறித்த முகநூல் நண்பரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை ரோடு ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் இம்மானுவேல் (வயது 47). இவர் சாத்தான்குளத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் முகநூல் மூலம் பழகி வந்தாராம். இந்த நிலையில் அந்த பெண்ணை நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே வர சொல்லி, அந்த பெண்ணிடம் இருந்து சுமார் 17 பவுன் தங்க நகைகளை மோசடியாக பறித்து சென்றாராம். இதுகுறித்து அந்த பெண், மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இம்மானுவேலை கைது செய்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு